×

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுடன் ஏஞ்சலினா சந்திப்பு

உக்ரைன்: பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி (46), போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். தற்போது உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பாதிப்புகளுக்கு பிறகு ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி, வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போரினால் பாதித்த மக்களைப் பார்வையிட அங்கு சென்ற ஏஞ்சலினா ஜோலி, லிவிவ் நகரிலுள்ள பேக்கரிகளுக்கு திடீரென்று சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் கனிவுடன் பேசி உற்சாகப்படுத்தினார்.

பிறகு ரயில் நிலையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா ஜோலி, அவர் களிடம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் கலகலப்பாகப் பேசி போட்டோ எடுத்துக்கொண்ட அவர் கூறுகையில், ‘இங்கு வசிக் கும் மக்கள் மற்றும் குழந்தைகளின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால், அது அவர்களுக்கு நல்லதொரு அமைதியை ஏற்படுத்தும்’ என்றார்.

போருக்குப் பிறகு முதல்முறையாக ஹாலிவுட் நடிகை ஒருவர் அங்கே சென்றுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் போர் பாதிப்புக்குள்ளான ஏமன் நாட்டுக்கு ஐநா சிறப்பு தூதராக ஏஞ்சலினா ஜோலி சென்று, அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருந்தார்.

Tags : Angelina , Ukraine, people, Angelina
× RELATED வெகுஜன புதைகுழியாக மாறியுள்ளது காசா: இஸ்ரேலுக்கு ஏஞ்செலினா ஜூலி கண்டனம்